பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு..! மழைக்கால எச்சரிக்கை தேவை..!

பெரியபாளையம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாம்புக் கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-28 07:45 GMT

பாம்பு கடித்து உயிரிழந்த ஹேமலதா 

பெரியபாளையம் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண் பாம்பு கடித்து உயிரிழப்பு. காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட செங்காளம்மன் கண்டிகையை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான ஹேமலதா (வயது 40). நேற்று நள்ளிரவு ஹேமலதா வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அவரது காலில் எதோ தீண்டியது போல உணர்ந்து அலறியடித்து துடித்து எழுந்து பார்த்தபோது பாம்பு ஒன்று அங்கிருந்து வேகமாக வெளியேறியது.

இதனை தொடர்ந்து ஹேமலதாவின் அலறல் சத்தத்தை கேட்ட குடும்பத்தினர் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு மருத்துவர்கள் ஹேமலதாவை  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி ஹேமலதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மழைக்கால எச்சரிக்கை 

தமிழகத்தில் பரவலாக கடந்த வாரம் மழை பெய்தது. மழை பெய்து ஓய்ந்த பின்னர் தரையின்  வெப்பம் அதிகமாகும். அதனால் மண்ணுக்குள் இருக்கும் உயிரினங்கள் மண்ணை விட்டு வெளியே வரும். மழைக்காலத்தில் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்கேவேண்டும். செடிகொடிகள் அதிகமாக இருக்கும் வீடுகளில் மாலை  நேரங்களில் கவனமாக இருப்பது அவசியம். 

அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருப்பது அவசியம் ஆகும். 

Tags:    

Similar News