கன்னிகைபேரில் சசிகலா வருகையையொட்டி கட்சியினர் பிரம்மாண்ட வரவேற்பு
Sasikala News Today Tamil -கன்னிகைபேரில் சசிகலா வருகையையொட்டி கட்சியினர் பிரம்மாண்ட வரவேற்பு;
Sasikala News Today Tamil -திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட கன்னிகைப்பேர், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் செய்தார். கன்னிகைப்பேர் பகுதியில் சசிகலாவுக்கு அதிமுக கொடிகளை ஏந்தியபடி பேண்டு வாத்தியங்கள் முழங்க பட்டாசு வெடித்தும் திமுக பொது செயலாளர் என்ற கோஷங்களை எழுப்பியபடி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ரேஷன் கடையில் முறையாக அரிசி வழங்க வேண்டும். தேவையற்ற பொருட்களை வாங்க ஏழைகளை நிர்பந்திக்க கூடாது என கேட்டு கொண்டார்.
ஓபிஎஸும், ஈபிஎஸும் தனித்தனியாக பிரதமரை சந்தித்தது அவர்களின் உட்கட்சி பிரச்சினை என தெரிவித்த சசிகலா அதற்கு தனியாக கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமில்லை என்றார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு நிச்சயம் செல்வேன் எனவும் சசிகலா தெரிவித்தார்.
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும், அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போதைப்பொருள் கடல் வழியாக வருவதால் கட்டுப்படுத்த முடியவில்லை என திமுக அமைச்சர் கூறுகிறார் எனவும், தமிழகத்தில் நுழையும் முன்பே அதனை தடுக்க வேண்டுமே தவிர, அடுத்தவர்களை குறை கூறுவதை விட்டு காவல்துறை போதைப்பொருள் தமிழகத்தில் வருவதை தடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
டிடிவி, ஓபிஎஸ், ஈபிஎஸ் யார் பக்கம் என்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கழக தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் எனவும், அவர்கள் யாரை சொல்கிறார்களோ அதுவே இறுதியானது என்றார்.
மக்களே எஜமானர்கள், மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அது தான் நடக்கும் எனவும் தெரிவித்தார். ஆளும் கட்சியினர் தவறு செய்தாலும் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், மின் கட்டண உயர்வை திசை திருப்பும் வேலை தான் ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசியது எனவும் சசிகலா விமர்சித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2