பழுதடைந்த பயணியர் கூடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டி தர கோரிக்கை
பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் நிழல் கூடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் ஆகும்.
குமரப்பேட்டை ஊராட்சி ஆபத்தான பேருந்து கட்டிடம் அகற்றி புதிய கட்டிடம் கட்டி தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குமரப்பேட்டை ஊராட்சியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி துணை சுகாதார நிலையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் நெசவு தொழில் செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் தயார் செய்யும் புடவைகள் பல்வேறு பகுதிகளுக்கு வியாபாரிகள் கொண்டு சென்று விற்பனை செய்து வருவார்கள். மேலும் இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பெரியபாளையம், அஞ்சாத்தம்மன் கோவில், மங்கலம், காரணி, புதுப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவி மாணவர்கள் இப்பள்ளியில் பயிலுகின்றனர்.
மேற்கண்ட கிராமங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் பேருந்தில் மூலம் குமரப்பேட்டைக்கு வந்து செல்வார்கள். இந்நிலையில் இங்குள்ள பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் நிழல் கூடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். தற்போது இந்த கட்டிடத்தில் மேற்கூரை சுற்று சுவர் பழுதடைந்தும். மழைக் காலங்களில் மழைநீர் உள்ளே செல்வதால், மழைக் காலங்களில் கடைகளில் மேற்கூரைகளின் கீழே நின்று மாணவர்களும் பொது மக்களும் வியாபாரிகளும் பேருந்துகளில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பாழடைந்த கட்டிடத்தை அகற்றி புதிய பேருந்து நிழல் கூடம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் பள்ளி மாணவர்களும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.