கும்மிடிப்பூண்டியில் ஆசை வார்த்தை கூறி இளம்பெண் கற்பழிப்பு: கொடூர இளைஞர் கைது
கும்மிடிப்பூண்டியில் ஆசை வார்த்தை கூறி இளம்பெண் கற்பழித்ததாக கொடூர இளைஞரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னையை அடுத்த மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வினோதா(28). இவர் தனியார் மென்பொருள் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு வினோதாவின் தம்பி நடன பள்ளியில் சேர்ந்துள்ளார். அந்த பள்ளியின் ஆசிரியர் பிரபுவும் வினோதாவின் தம்பியும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பிரபுவுக்கும் - வினோதாவுக்கும் இன்ஸ்டகிராம் மூலம் பழக்கம் ஏற்படுகிறது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் 2019 டிசம்பர் மாதம் பிரபு வளர்ப்பு நாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி வினோதாவை சொகுசு காரில் ஏற்றுக்கொண்டு மாதர்பாக்கம் பகுதியிலுள்ள அவர் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது கூல்ட்ரிங்ஸ், பிஸ்கட் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்கிக்கொண்டு முதலில் கூல்டிரிங்ஸ் குடிக்குமாறு வினோதாவை வற்புறுத்தியுள்ளார். அவரும் அதனை அருந்தியுள்ளார்.
ஆனால் மறுநாள் எழுந்து பார்த்தபோது என்னுடைய ஆடைகள் அனைத்தும் சின்னாபின்னம் ஆனது அப்போதுதான் என்னை கற்பழிக்கப்பட்டது எனக்கு தெரியவந்ததாக வினோதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரபுவிடம் கேட்டதற்கு நம் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்று கூறி அவரை சமாதானப் படுத்தியுள்ளார். அதைத் நம்பி தொடர்ந்து அடிக்கடி இருவரும் பலமுறை உடலுறவு கொண்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் பிரபு தாய் ரேவதிக்கு இந்த விஷயம் தெரியவர, இருவருக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்றால் நகை, பணம் தேவைப்படுகிறது என்று கூறி அடிக்கடி என்னிடம் பணம் கேட்டு வாங்கி உள்ளனர்.
தொடர்ந்து பிரபு உடன் திருமணம் செய்ய வலியுறுத்தியபோது, பிரபுவும் தாய் ரேவதியும் என்னிடம் அக்டோபர் 2009 ஆம் ஆண்டு ராயபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து வைக்க வேண்டும். அதற்கு ஒரு லட்சம் வரை பணம் செலவாகும் என கூறியுள்ளார்.
இதற்கு நான் கூகுள் பே முலம் 80 ஆயிரம் ரூபாய் அனுப்பி அனுப்பினேன். இரண்டு நாட்களில் இருவரும் ராயபுரத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்றுள்ளனர். ஆனால் அங்கு வழக்கறிஞர்கள் வருவார்கள் என காத்திருந்து காத்திருந்து வழக்கறிஞர்கள் யாரும் வரவில்லை.
இதன் பின்னர் பிரபுவின் தாய் ரேவதி எதிரே உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் தாலி கட்டாமல் மாலை மற்றும் மாற்றிக்கொண்டு வீடு திரும்பினர்.
இதற்கிடையில் 2022 ஜனவரி மாதம் வினோதா கர்ப்பமானார். இது இறித்து பிரபுவிடம் கேட்டதற்கு 100 சவரன், நகை 10 லட்சம் பணம் தர வேண்டும் அப்போதுதான் திருமணம் நடக்கும் என கூறியதோடு ஏற்கனவே உன்னோடு உடலுறவு கொண்ட வீடியோ உள்ளது. அதனை இணையதளத்தில் விட்டு விடுவேன் எனக் கூறி பிரபு மிரட்டியுள்ளார்.
இதன் பின்னர் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வினோதா சென்று, மேற்கண்ட தகவலை கூறி புகார் மனு அளித்துள்ளார். புகாரின் பேரில் அதிரடியாக பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பிரபுவின் தாய் ரேவதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.