கும்மிடிப்பூண்டியில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

கும்மிடிப்பூண்டியில் அடிப்படை வசதிகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-27 02:30 GMT

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே வெட்டு காலனி, மேட்டு காலனி ஆகிய பகுதிகளில் சாலை வசதி, சுடுகாட்டுப் பாதை, கழிவுநீர் கால்வாய், குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை மாற்றி அமைப்பது போன்ற குறைபாடுகள் உள்ளன. இது குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சாலை விரிவாக்கத்தின் போது நெடுஞ்சாலை துறையினர் நில எடுப்பு நடவடிக்கையில் வழங்கப்பட்ட நிலங்களை பாதிக்கப்பட்ட ஆதி திராவிடர் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு வழங்க வலியுறுத்தியும், அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 மணி வரை தொடர்பு முழக்கங்கள் எழுப்பியவாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்த வட்டாட்சியர் ராமன், பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா மற்றும் போலீசார் சம்பவ இடத்திறகு விரைந்து வந்து போராட்டம் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், எங்கள் பகுதியில் மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் அதுவரை எங்கள் உண்ணாவிரதம் தொடரும் என்று கூறியுள்ளார்கள்.  பின்னர் இதற்கு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் தகவலை கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News