பயணிகள் நிழற்குடையை சீரமைத்துத்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
மதுபானம் அருந்துவோர்களின் கூடாரமாக மாறி வரும் அஞ்சாத்தம்மன் கோவில் பயணியர் நிழற் குடை.யை சீரமைக்கக்கோரிக்கை
மதுபானம் அருந்துவோர்களின் கூடாரமாக மாறி வரும் அஞ்சாத்தம்மன் கோவில் பயணியர் நிழற் குடை.யை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே குமாரபேட்டை ஊராட்சிக்குட்பட்ட அஞ்சாத்தம்மன் கோவில் பகுதியில். பயணியர் நிழற்குடை ஒன்று உள்ளது. இப்பகுதியில் மங்களம், புதுப்பாளையம், காவா மேடு பேருந்துக்காக காத்திருப்பதற்காக பயணியர் நிழற்கூடை ஒன்று அமைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் பயணியர் நிழற்குடையில் காத்திருந்து ஆரணி, பெரியபாளையம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, செங்குன்றம் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வந்து செல்லும் பேருந்துகள் ஏறி பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பயணியர் நிழற்குடை மேல் கூரையும் பழுதடைந்து காணப்படுவதோடு அப்பகுதியில் உள்ள சில குடிமகன்கள் இரவு நேரங்களில் மது அருந்தியும் தேவையில்லாத பொருட்களையும் அங்கே வீசி செல்கின்றனர். இது மட்டுமல்லாது அப்பகுதி உள்ள சிலர் தாங்கள் கொண்டுவரும் இரு சக்கர வாகனங்களையும் நியர் குடைக்குள் விட்டு செல்வதால் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும், திறந்தவெளியில் நின்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இது போன்று செயல்களை செய்யாமல் சம்பந்தப்பட்ட குமரப்பேட்டை ஊராட்சி நிர்வாகம் இந்த பேருந்து நியர் கூடையை சுத்தம் செய்து சேதமடைந்த பகுதியை சீர் செய்து சமூக விரோத செயல்கள் செய்ய நபர்களுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.