ஆறு வழிச்சாலை பணிகளுக்காக ஏரியில் மண் அள்ளுவதை எதிர்த்து போராட்டம்
ஏரியில் அரசு அனுமதித்த அளவைவிட அதிக அளவு மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்
பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சியில் நடைபெற்று வரும் ஆறு வழிச்சாலை பணிகளுக்காகஏரியில் அரசு அனுமதித்த அளவைவிட அதிக அளவு மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 50.க்கும் மேற்ப்பட்டோர் பொக்லையன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளுர் மாவட்டம், தச்சூர் முதல் ஆந்திரமாநிலம் சித்தூர் வரை 116 கி.மீ. தூரம் வரை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ஆறு வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது அதற்காக, 1238 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப் படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருவள்ளுர் மாவட்டம், வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட சின்ன செங்காத்தா குளம் பகுதியில் ஆறு வழி சாலை பணிக்காக அங்குள்ள ஏரியில் குவாரி அமைக்கப்பட்டு சவுடு மண் அள்ளப்பட்டு வருகிறது. இதில் அரசு அனுமதித்த இடத்திற்கு மாறாக வேறு ஒரு இடத்தில் மண் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் மூன்று அடி ஆழம் எடுக்க வேண்டிய நிலையில் 10 அடிக்கும் மேலாக மண் அள்ளப்படுவதாக குற்றம் சாட்டி கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் பொக்லைன் இயந்திரத்தை சிறை பிடித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் வடமதுரை ஊராட்சியில் சுமார் 1000.க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும். இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களில் விவசாயம் செய்து வருவதாகவும் இந்த ஆறு வழி சாலை பணிக்காக ஏரியில் அரசு அனுமதித்த மூன்று அடி ஆழம் அளவைவிட பத்தடிக்கும் மேலாக மண் அளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். பெரிய அளவில் பள்ளம் தோன்றி எடுப்பதால் மழைக்காலங்களில் இப்பகுதியில் ஆடு மாடு மேய்ச்சலுக்கு வரும்போது தாகம் தணிக்க இந்தப் பள்ளத்தில் இறங்கினால் தாங்கள் செல்லப் பிராணிகள் உயிரிழக்கும் அபாயமும், அதேபோல் விடுமுறை நாட்களில் தாங்கள் குழந்தைகள் குளிக்கச் சென்றால் சேற்றில் சிக்கும் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
எனவே ஏரியில் குறிப்பிட்ட அளவை விட அதிகமார மண் எடுக்கக்கூடாது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.