பூவை எம்.மூர்த்தியார் பிறந்தநாள்: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு
பூவை எம்.மூர்த்தியார் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.;
திருவள்ளூரை மாவட்டம் ஆண்டரசன்பேட்டையில் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை எம்.மூர்த்தியாரின் 71-ம் ஆண்டு பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூர்த்தியாரின் திருஉருவப் படத்துக்கு புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான டாக்டர் பூவை எம்.ஜெகன் மூர்த்தியார் வழிகாட்டுதலின்படி புரட்சி பாரதம் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம்-இனிப்பு உள்ளிட்டவைகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில்,எல்லாபுரம் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் பூவை எம்.மூர்த்தியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய பொருளாளர் அழிஞ்சிவாக்கம் பிரகாஷ் தலைமையில் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் பூவை எம்.மூர்த்தியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில்,ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், மேகநாதன், வார்டு உறுப்பினர் கதிர்வேல், கிளை தலைவர் முருகன், கிளை பொருளாளர் சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புரட்சி பாரதம் கட்சியின் எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.