ஏளாவூர் பகுதியில் 24 மணி நேரம் இயங்கும் மருத்துவ மையம் அமைக்கக்கோரி பாமக மனு

எளாவூர் அருகில் உள்ள ஆந்திரா, தமிழ்நாடு எல்லைக்கு அருகே உள்ள 24 மணி நேர அவசர மருத்துவ மையத்தில்தான் முதலுதவி பெறுகின்றனர்

Update: 2023-05-11 04:15 GMT

கும்மிடிப்பூண்டி அருகே ஏளாவூர் பகுதியில் 24 மணி நேர அவசர மருத்துசேவை மையம் அமைத்து தரக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளர் கோ ரவிராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியனிடம் பொது மக்கள் சார்பாக கோரிக்கை மனு அளித்தார் :

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், ஏளாவூர் பகுதியில் 24 மணி நேர அவசர மருத்துவ மையம் அமைத்து தரக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளர் கோ ரவிராஜ் தலைமையில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியிடம்  கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், ஏளாவூர் சுற்றுவட்டார 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மீனவர்கள், வன்னியர்கள், தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மக்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு மருத்துவ உதவி என்றால் எளாவூர் அருகில் உள்ள ஆந்திரா, தமிழ்நாடு எல்லைக்கு அருகே நவீன டோல்கேட் நிலையம் உள்ளது.

அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேர அவசர மருத்துவ சென்டரில் தான் அவசர முதலுதவி பெற்று வருகிறோம். இந்த அவசர மருத்துவ சேவை மையம் இல்லை என்றால் எங்கள் கிராமப்புற மக்களுக்கு பாம்பு கடித்தலோ அல்லது சாலை விபத்து, உடல் சார்ந்த மருத்துவ அவசர உதவிக்கு 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொன்னேரி மருத்துவ மனைக்கும் அல்லது 60 கிலோ மீட்டர் தொலைவில்  உள்ள சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டி உள்ளது.  இதன்காரணமாத  அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்படுகின்றது.

எனவே 24 மணி நேர அவசர மருத்துவ சென்டரை ஏளாவூர் பகுதியில் நடைமுறைப்படுத்தவும், மேலும் தற்பொழுதுள்ள 24 மணி நேர அவசர மருத்துவ சேவை மையத்தை மேம்படுத்தி தொடர வேண்டும் என்று அந்த மனுவில்  கோரிக்கை வைத்துள்ளனர். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் அங்கிருந்து சென்றனர். இதில் ஒன்றிய செயலாளர் கேசவன், துணை தலைவர் கே.வெங்கடேசன், ஒன்றிய கவூன்சிலர் சீனிவாசன், ஆண்டியப்பன், மாரிமுத்து, வின்சட் உட்பட பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.


Tags:    

Similar News