பணத் தகராறில் ஒருவருக்கு அடி உதை, 6 பேர் மீது வழக்குப்பதிவு

கும்மிடிப்பூண்டி அருகே பணத் தகராறில் ஒருவருக்கு அடி உதை விழுந்தது. இது தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2021-05-11 17:09 GMT

கும்மிடிப்பூண்டி காவல் நிலையம்

கும்மிடிப்பூண்டி அடுத்த நாகராஜ்  கண்டிகை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், அதே பகுதியை சேர்ந்த தாஸ் (எ) முரளிதரன் இவர்களுக்கு இடையே பணப்பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கார்த்திக் வயல் வெளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று கொண்டிருந்த நிலையில், தாஸின் உடைய ஆதரவாளர்கள் முகிலன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட நபர்கள் திடீரென சாலையில் அவரை தாக்கியுள்ளனர்.

இதை அறிந்த அக்கம்பக்கத்தினர்  அவரை மீட்டு உடனடியாக கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News