கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி குவியும் தேங்காய் குப்பைகளால் பொதுமக்கள் அவதி
பேரூராட்சி ஊழியர்கள் கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பை துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை தொடர்கிறது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில், வார்டுகளில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதனை அடுத்து கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து ரயில்வே நிலையத்திற்கு செல்லும் சாலை வசந்த் நகர் பகுதியில் முருகன் கோவில் குளம் ஒன்று உள்ளது.
இப்பகுதியில் நிறைந்த குடியிருப்புகள் உணவகங்கள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாட வீடுகளில் இருந்து சேகரித்துக் கொட்டும் குப்பைகளை தூய்மை பணியாளர்களை வைத்து அப்புறப்படுத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக இப்பகுதியில். கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திற்கு செல்லும் வசந்த நகர் பகுதியில் முருகன் கோவில் அருகே சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகள் தேங்கி நின்று அதில் உணவு தேடி மாடுகள், நாய்,பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
இது குறித்த அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பகுதி மக்கள் சிலர் தெரிவிக்கையில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாகவே வீடுகள் உணவுகளிலிருந்து வெளியேறும் குப்பை கழிவுகளை தூய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தாததால் துர்நாற்றம் வீசுவதோடு அவதியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்தியபடி செல்கின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகி உள்ளதாகவும். உடனடியாக பேரூராட்சி ஊழியர்கள் கவனம் செலுத்தி அப்புறப்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.