குமரப்பேட்டை ஊராட்சியில் உள்ள கழிவறை கட்டிடத்தை சீர் செய்ய மக்கள் கோரிக்கை

குமரப்பேட்டை ஊராட்சியில் உள்ள கழிவறை கட்டிடத்தை சீர் செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-08-11 03:00 GMT

முட்புதர்கள் சூழ்ந்துள்ள சுகாதார கழிவறை கட்டிடம்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட எல்லாபுரம் ஒன்றியம் குமரப்பேட்டை ஊராட்சி எல் எம் நகர் பகுதியில் சுமார் 150 குடும்பங்களை சார்ந்த 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு பொது சுகாதார கழிவறை கட்டிடம் ஒன்று கட்டித் தரப்பட்டு அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் இந்த கட்டடம் சுற்றி அடர்ந்த முட்பொதர்கள் வளர்ந்து கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது.

எனவே பகுதி மக்கள் கூறுகையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடம் சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து உள்ளே சென்றபோது சில நேரங்களில் விஷம் நிறைந்த பாம்புகள் காணப்பட்டதாகவும், இதனை சீரமைத்து தர வேண்டுமென பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

எனவே இந்த பழுதடைந்த கழிவறை கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்து முட்பொதர்களை அகற்றி சீர் செய்து தர வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News