பெரியகுளத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென மக்கள் கோரிக்கை

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் வரை இந்த பெரிய குளத்தின் நீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்

Update: 2023-05-21 01:30 GMT

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள சீரமைக்கப்படாத பெரியகுளம்

கன்னிகைப்பேர் பெரிய குளத்தை தூர்வாரி சீர் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் சுமார் 10,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தின் பின்புறம்  பெரியகுளம் உள்ளது. கிராமத்தைச்சேர்ந்த மக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் வரையில் இந்தப் பெரிய குளத்தின் நீரை பயன்படுத்தி வந்தனர்.  நாளடைவில் குளத்தை தூர்வாரி பராமரிக்காமல் போனதால் அதில் அடர்ந்த நாணல்கள், செடி கொடிகள் என வளர்ந்து கிடக்கிறது. மேலும் அருகில் உள்ள மீன் மற்றும் கோழி இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளையும் இந்த குளத்தில்தான் கொட்டப்பட்டு வருகினது.

இது மட்டுமல்லாமல் இந்த குளத்தை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரையும் இந்த குளத்தில்தான் சேருகிறது. இதனால் நீர் மாசுபாடு அடைந்து  துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள்  புகார் தெரிவிக்கின்றனர். இது மட்டுமல்லாமல் சுமார் ஐந்து ஏக்கர்ருக்கு மேலான பரப்பில் இருந்த இந்து குளம் தற்போது ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி ஏரியின் பரப்பளவு சுருங்கிப் போயுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குளத்தை தூர்வாரி பூங்கா அமைத்து தர வேண்டும் என்று கன்னிகைப்பேர் கிராம மக்கள் பலமுறை ஊராட்சியில் நடைபெற்ற  கிராம சபை கூட்டத்தில் முறையிட்டும், எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்து எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்தப் பெரிய குளத்தை தூர்வாரி நடைப்பாதை மற்றும் பூங்கா அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.




Tags:    

Similar News