உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் :பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்..!
கும்மிடிப்பூண்டி அருகே அனுமதி இன்றி கொண்டு செல்லப்பட்ட 2. லட்சத்து20 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டியில் உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கருவூலத்தில் ஒப்படைப்பு.
நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்காக கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர் ,பூந்தமல்லி, ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கார், லாரி, பேருந்து, இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ ஆகிய பல்வேறு வாகனங்களை நிறுத்தி மூன்று ஷிப்ட் முறையில் தீவிரமாக வாகனங்களை சோதனை செய்கின்றனர்.
இந்த சோதனையின் போது வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சாலை மார்க்கமாக கடத்தப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவித்த தினங்களில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி படம் பொறித்த கைகடிகாரம், தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல், கஞ்சா பறிமுதல் நடவடிக்கைகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஹேமலதா தலைமையில் நேற்று காலை முதல் தமிழக ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம், மாதர் பாக்கம், பெரியபாளையம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை, புதுவாயில், கும்மிடிப்பூண்டி பைபாஸ், சத்தியவேடு சாலை ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது மாதர்பாக்கம் - பொம்மஜிகுளம் சாலையில் தேர்தல் அலுவலர் ஹேமலதா திடீரென சத்தியவேடு இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை இட்டபோது அவரிடம் உறிய அனுமதியின்றி 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருந்த தெரியவந்தது. உடனடியாக மேற்கண்ட பணத்தை எடுத்துக் கொண்டு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் உதவி அலுவலர் கணேஷ் இடம் ஒப்படைத்தனர்.
பின்பு இந்த பணம் கொண்டு வந்தவர் சத்தியவேடு பகுதியைச் சேர்ந்த லோகேஷ் ( 27) என்பதும் இவர் திருமண நிகழ்வுக்காக கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மேற்கண்ட பணம் கும்மிடிப்பூண்டி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.