பெரியபாளையம் போலியோ சொட்டு மருந்து முகாம்: எம்எல்ஏ கோவிந்தராஜன் பங்கேற்பு

பெரியபாளையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் எம்எல்ஏ கோவிந்தராஜன் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்

Update: 2022-02-27 07:30 GMT

குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் எம்எல்ஏ கோவிந்தராஜன் 

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி எல்லாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ  டி.ஜே கோவிந்தராஜன் கலந்து கொண்டு பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார். 

இதில் வட்டார மருத்துவ சுகாதார மேற்பார்வையாளர் ஜெகநாதன், சுகாதார ஆய்வாளர் நித்தியானந்தம், எல்லாபுரம் பகுதி திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News