கும்மிடிப்பூண்டி அருகே தனியார் விடுதியை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன்

கஞ்சா போதைக்கு அடிமையாகும் சிறார்களை மீட்டெடுக்க போதை தடுப்பு மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்

Update: 2023-06-02 03:45 GMT

கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன்

கஞ்சா போதைக்கு அடிமையாகும் சிறார்களை மீட்டெடுக்க போதை தடுப்பு மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பாஞ்சாலை பகுதியில் இயங்கி வரும் தனியார் விடுதியை சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தனியார் விடுதி, வகுப்பறை, சமையலறை உள்ளிட்டவற்றை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம்  கூறியதாவது: கஞ்சா போதைக்கு அடிமையாகும் பள்ளி மாணவர் களை மீட்டெடுக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த கேள்விக்கு, சமூக நலத்துறை சார்பில் சிறார்களை மீட்டெடுக்க கடந்தாண்டு இரண்டு மற்றும் இந்தாண்டு மூன்று என மொத்தமாக 5 போதை தடுப்பு மையங்கள் துவங்கப்பட்டுள்ளன எனவும் போதைக்கு அடிமையாகும் மாணவர்கள், சிறார்கள் இந்த மையங்களில் மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமூக நலத்துறை சார்பில் குழந்தை திருமணம், போதை பொருட்களின் பயன்பாட்டால் வரும் தீமைகள் குறித்தும் வுழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான 24மணி நேரம் செயல்படும் உதவி எண்கள் 1098, 181 ஆகியவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தை திருமண குறித்து வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் கல்வி பயில தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

சமூக நலத்துறை சார்பில் நடத்தப்படும் வளைகாப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தாலிக்கு தங்கம் நிறுத்தப்பட்டது குறித்த கேள்விக்கு திருமண முடிந்து 3ஆண்டுகள் கழித்தும் வழங்கப்படாமல் இருந்து வந்த திட்டம் மாற்றப்பட்டு தற்போது புதுமைப்பெண் என்ற திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 4ஆண்டு மற்றும் 5ஆண்டு கல்வி பயிலும் பெண்களும் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருவதாகவும்  அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.




Tags:    

Similar News