திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு ஆணழகன் போட்டி..!
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் 62 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் ஆணழகன் போட்டி நடைபெற்றது.;
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் ஆணழகன் போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்களின் 62 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை கும்மிடிப்பூண்டி தொகுதி அமைப்பாளர் அம்பேத்கர் நாகராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமை ஏற்று நடத்தினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அரசியல் குழு மாநில தலைவர் நீலவானத்து நிலவன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் டேனி கிங் பால், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் சிவகுமார்,டைட்டஸ் தொழிலதிபர் கே.ஆர்.வி வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பாரத் கிளாசிக் 2024 ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற பாண்டிச்சேரியை சேர்ந்த மணிவண்ணனுக்கு மற்ற வீரர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.
இதில் காட்வின் கிறிஸ்டோபர், திமுகவைச் சார்ந்த மனோகரன்,தேசிய முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் ஜி.ஜி. சிவா,ஒன்றிய கவுன்சிலர் திருமலை புதுவாயில் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் தண்டலச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தராஜ், ஒன்றிய செயலாளர்கள் விமல் சுகுமார், அம்பேத்கார் நாகராஜ், மற்றும் விடுதலை சிறுத்தைகளின் பொறுப்பாளர்கள் தளபதி சுரேஷ் பாலா (எ) சுரேஷ் விஜி,ராஜா, பிரசாந்த், சதீஷ்குமார் சூர்யா.சரவணன்.ராள்ளபாடி பாபு. ராஜசேகர் லெனின் குமார், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.