லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு!
பெரியபாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.;
பெரியபாளையம் அருகே வடமதுரை பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழப்பு. பெரியபாளையம் போலீசார் விசாரணை.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (38), இவர் பெரியபாளையத்தில் உள்ள தனியார் விடுதியில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து சுதாகர்(38) மற்றும் அதே பகுதி சேர்ந்த சரவணன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பெரியபாளையத்தில் இருந்து வடமதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை சுதாகர் இயக்கினார்.
அப்போது சென்னை, திருப்பதி நெடுஞ்சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து லோடு ஏற்றி கொண்டு ஆந்திராவிற்கு எதிர் நோக்கி வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
லாரி சுதாகர் தலை மீது ஏரி இறங்கியதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பின்னால் அமர்ந்திருந்த சரவணன் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர்தப்பித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெரியபாளையம் போலீசார் உயிரிழந்த சுதாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த சரவணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பாக பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.