சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய முன்னாள் மாணவர்கள்..!
கும்மிடிப்பூண்டி அரசு பள்ளியில் மூன்றாம் ஆண்டு சந்திப்பு விழாவில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.;
கும்மிடிப்பூண்டி அரசுப் பள்ளியில் மூன்றாம் ஆண்டு சந்திப்பு விழாவில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளி வளர்ச்சிக்கும் மாணவர்களின் வளர்ச்சிக்கும் பங்கேற்க வேண்டும் என அழைப்புதல் கொடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் செயல்பட்டு வரும் கே.எல்.கே. அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து தாங்கள் படித்த பள்ளிக்கூடத்தை புதுப்பிக்கும் வகையில் பள்ளிக்கு வண்ணம் பூசுதல், கண்காணிப்பு கேமரா பொருத்துதல், இருக்கைகள் வாங்கி கொடுத்தால,பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, மற்றும் ஏழை எளிய மாணவர்கள் மேல்படிப்புக்கு கல்வி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை முன்னாள் மாணவர்கள் செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக 1987 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து மூன்றாவது ஆண்டாக சந்திப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி ரெட்டி தலைமை தாங்கினார்.
முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் ரகு, செயலாளர் கே. பிரகாஷ், பொருளாளர் டி. கே. பத்மநாபன், ஏ. வி. எஸ். மணி, ராகவரெட்டிமேடு ரமேஷ், தொழில் அதிபர் முனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து இதுவரை கே. எல். கே. அரசு மேல்நிலைப் பள்ளிக்கு முதலாம் ஆண்டு 50,000 மதிப்புள்ள கணினி மற்றும் உதிரி பாகங்கள் வழங்கியும் இரண்டாம் ஆண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினர்.
அதைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த 7 மாணவ, மாணவிகளுக்கு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சுப்பிரமணிய ரெட்டி ஊக்கத்தொகை பரிசுகளையும் கேடயத்தையும் வழங்கி பாராட்டி பேசினார்.
இதில் முன்னாள் 1987 ஆண்டு 10 ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பாக நடத்தினர். இதேபோன்று கும்மிடிப்பூண்டி, சுண்ணாம்புகுளம்,எளாவூர், மாநெல்லூர், கவரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் எனவும் ஏழை எளிய மாணவர்களை கண்டறிந்து அவர்கள் திறமைக்கேற்ப மேற்படிப்புக்கு உதவ வேண்டுமென ஓய் பெற்ற தலைமையாசிரியர் சுப்பிரமணி ரெட்டி கூறினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.