கும்மிடிப்பூண்டி டிஜேஎஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்...
கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள டிஜேஎஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் கவரப்பேட்டை அருகே பெருவாயலில் டிஜேஎஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி வளாகத்தில் டிஜேஎஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் டிஜேஎஸ் பப்ளிக் பள்ளி (சிபிஎஸ்இ) ஆகியவை சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்விக் குழுமத்தின் தலைவர் கோவிந்தராசன் தலைமை தாங்கினார். கல்விக்குழுமத்தின் மேலாண்மை இயக்குநரும், செயலாளருமான ஆறுமுகம், துணைத் தலைவர் தேசமுத்து, மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் டாக்டர் பழனி, கல்விக் குழுமத்தின் இயக்குநர்கள் தமிழரசன், கபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொங்கல் விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் டிவி கலக்கப்போவது யாரு? புகழ் திவாகர் கலந்து கொண்டு பொங்கல் திருநாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடுவதின் சிறப்புகள் குறித்து விளக்கி கூறி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில், மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர் ஜெயக்குமார், துணை முதல்வர் சீனிவாசன், சிபிஎஸ்சி பள்ளியின் முதல்வர் அசோக், டிஜேஎஸ் கல்லூரியின் நிர்வாக அதிகாரி ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில், மாணவ-மாணவிகள் பொங்கல் வைத்தும், சிலம்பம், கோலாட்டம், தேசபக்தியை வலியுறுத்தும் வகையில் சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை தத்ரூபமாக செய்து மெய்சிலிர்க்க வைத்தனர். நிகழ்சியில் பங்கேற்ற அனைவரையும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் ஆலோசகர் ஞானப்பிரகாசம் வரவேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிர்வாக அதிகாரி வெங்கடசுப்ரமணியன் நன்றி கூறினார்.