பெரியபாளையம் அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது மோசடி வழக்கு

பெரியபாளையம் அருகே அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-02-27 01:30 GMT

கொம்புரெட்டிகண்டிகை அரசு தொடக்கப்பள்ளி.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கொம்புரெட்டிகண்டிகை அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து வருபவர் ஈவிலின் செல்வகுமாரி. இவர் மீது மாவட்ட கல்வி அலுவலரான ராதாகிருஷ்ணன் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

கடந்த 1999ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஈவிலின் செல்வகுமாரியின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் உண்மை தன்மை சரிபார்த்தபோது மதிப்பெண் மாற்றி போலியாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரையடுத்து தலைமை ஆசிரியர் ஈவிலின் செல்வகுமாரி மீது பெரியபாளையம் காவல்துறையினர் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News