கும்மிடிப்பூண்டி அருகே பழங்குடி மக்களின் வீடுகளுக்குள் வெள்ளநீர்
கும்மிடிப்பூண்டி அருகே பழங்குடி மக்களின் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி அருகே பழங்குடி மக்களின் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் அவர்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததே இதற்குக் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட தலையாரி பாளையம் கிராமத்தில் உள்ள எஸ் டி காலணியில் சுமார் 50 பழங்குடியின குடும்பங்கள் சார்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் இப்பகுதியில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் தின கூலி வேலை மட்டும் நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த குடும்பங்களைச் சேர்ந்த பெரும்பாலும் மக்கள் குடிசைகள் அமைத்து அதில் வாழ்கின்றனர். இந்நிலையில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணத்தினால் இப்பகுதிகளில் மழை நீர் செல்ல வழி இல்லாததால் வீடுகளை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் இப்பகுதியில் வாழும் மக்கள் வெளியேற முடியாமல் வேலை இல்ல திண்டாட்டத்தில் இவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை நீர் குடிநீருடன் கலந்து இந்த தண்ணீரை தான் இப்பகுதி மக்கள் பருகி வருகின்றனர் இதனால் தொற்று நோய் பரவும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ஆண்டுதோறும் பெய்து வரும் வடகிழக்கு மழை காலத்தில் அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு வந்து பார்வையிடுவதும் கண் துடைப்பாக கால்வாய்களை தூர் வாருவதும் வாடிக்கையாகியுள்ள நிலையில் இந்த ஆண்டும் பருவமழைக்கு இந்த பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் சிலர் வீடுகளை விட்டு வெளியேறி சாலையோரங்களில் உள்ளிட்ட பல பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் நாங்கள் வளர்க்கும்.
ஆடு மாடு மற்றும் நாய் கோழி போன்ற செல்லப்பிராணிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்ட உள்ளன. எனவே புதிதாக கட்டப்படும் மழை நீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவும், அருகாமையில் உள்ள மேல்நிலை ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.