ஆலம்பாக்கம் ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம்..!
திருவள்ளூர் மாவட்டம், ஆலப்பாக்கம் ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
பெரியபாளையம் அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமை ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ஆறுமுகம் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.இதனை ஊராட்சிமன்ற தலைவர் பிரமிளாஆறுமுகம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். துணைத் தலைவர் எம்.செல்வம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
ஆலப்பாக்கம் ஊராட்சி மன்றம்,சென்னை, தண்டையார்பேட்டை எம்.என்.கண் மருத்துவமனை, ஜானகி நடராஜன் கண்பார்வை ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை,சென்னை மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த முகாமில் இக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர்.
கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று கூறினர்.இதில்,டாக்டர் சூர்யா தலைமையில் வந்திருந்த ஏழு பேர் கொண்ட மருத்துவ குழுவினர்கள் பொது மக்களுக்கு கண் பரிசோதனை,மாறு கண் பரிசோதனை,கருவிழி கண் பரிசோதனை,கண்நீர் அழுத்த நோய் பரிசோதனை,சர்க்கரை நோயாளிகளுக்கான விழித்திரை பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.நிகழ்ச்சியின் முடிவில்,ஊராட்சி செயலர் பிரபாகரன் நன்றி கூறினார்.