காலாவதியான பீர் பாட்டில்களை அதிகாரிகள் மண்ணுக்குள் புதைத்து அழிப்பு..!

தொழிற்சாலைக்குள் புகுந்து காலாவதியான மது பாட்டில்களை அள்ளிசென்ற கும்பல் :வருவாய்த் துறையினர் காவல்துறையினருடன் சென்று காலாவதியான பாட்டில்களை கொண்டு சென்றவர்கள் விவரங்களை விசாரித்து தொழிற்சாலைக்குள் இருந்து 6லட்சம் பீர் பாட்டில்களை அதிகாரிகள் அழித்தனர்.;

Update: 2024-07-12 05:15 GMT

குழி தோண்டி பீர் பாட்டில்களை புதைக்கும் பணிகள் நடக்கின்றன.

கும்மிடிப்பூண்டி அருகே சுமார் 6 லட்சம் காலாவதியான பீர். பாட்டில்கள் மூடப்பட்ட தொழிற்சாலையில் இருந்து போலீசாரின் பாதுகாப்புடன் பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கத் பல்வந்த் முன்னிலையில் வருவாய்த் துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பில்லா குப்பம் பகுதியில் அமைந்துள்ள அப்பல்லோ தனியார் பீர் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இயக்கப்படாமல் மூடப்பட்டிருந்தது. அந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட பீர் பாட்டில்கள் சுமார் 6 லட்சம் அளவிற்கு அங்கே இருந்துள்ளது. அப்பகுதி மக்கள் அந்த தொழிற்சாலைக்கு அடிக்கடி உள்ளே சென்று மது பாட்டில்களை எடுத்து சென்றது போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தெரியவந்தது.   உடனடியாக தொழிற்சாலையில் உள்ளே சென்று பார்த்த போது காலாவதியான பீர் மது பாட்டில்கள் சுமார் 6 லட்சம் அளவிற்கு உள்ளே இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினர் உடனடியாக தகவல் அளித்ததின் பேரில் அங்கு வந்த பொன்னேரி கோட்டாசியர் வாகே சங்கத் பல்வந்த், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் வருவாய் துறையினர் முன்னிலையில் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரம் மூலம் மண் தோண்டப்பட்டு, காலாவதியான பீர் பாட்டில்களை மண்ணுக்குள் புதைக்கும்  பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பகுதியில் யாரையும் அனுமதிக்காமல் அனைத்து பீர் மது பாட்டில்களையும் யாரும் பயன்படுத்த முடியாமல் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப்பணியில் காவல்துறையினர் உடனடியாக செயல்பட்டு காலாவதியான பீர் மது பாட்டில்களை அளித்து வருவதற்கு காரணமே யாராவது இந்த பீர் பாட்டில்களை எடுத்து குடித்துவிட்டு உயிரிழப்புகள் அல்லது பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் உடனடியாக அதனை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிற்சாலைக்குள் புகுந்து காலாவதியான மது பாட்டில்களை கொண்டு வந்து வேறு யாரேனும் குடித்தனரா? என்பது குறித்தும் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News