கும்மிடிப்பூண்டி: கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு
கும்மிடிப்பூண்டியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட புது கும்மிடிப்பூண்டி, கரும்பு குப்பம், புதுப்பேட்டை, சுண்ணாம்பு குளம் மற்றும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட கோட்டக்கரை ஆகிய பகுதிகள் உள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வராத நிலையில் அவர்கள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.