கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் கொரோனா தொற்று
கும்மிடிப்பூண்டி டவுன் காவல் நிலையத்தில் 1பெண் காவலர் உள்பட 3காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல்துறை கண்காணிப்பாளராக ரமேஷ் தேவராஜ் பணிபுரிந்து வருகிறார். இவரின் கட்டுப்பாட்டில் 5 சட்ட ஒழுங்கு காவல் நிலையமும் 1 அனைத்து மகளிர் காவல் நிலையமும் இயங்கி வருகிறது.
இந்த 6 காவல் நிலையங்களில் 160 ஆண் காவலர்களும் 20 பெண் காவலர்களும் மொத்தம் 180 காவலர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் கொரோனா காலகட்டத்தில் தொடர்ந்து மக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதால், பல காவலர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தும் சில காவலர்கள் உயிரிழந்தும் உள்ளனர்.
இதை தொடர்ந்து இரண்டாம் அலை தாக்கத்தால் கும்மிடிப்பூண்டி டவுன் காவல் நிலையத்தில் 2 ஆண் காவலர்களும் 1 பெண் காவலரும் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சுகாதாரத் துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் உயிரை பணயம் வைத்து மக்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும், பல பகுதிகளில் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் அலட்சியமாய் செயல்படுவது வருத்தமளிப்பதாக பாதிக்கப்பட்ட காவலர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.