முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கைப்பந்து போட்டி: எம்எல்ஏ பரிசு வழங்கல்
இரண்டு நாள்கள் நடத்தப்பட்ட இந்த போட்டியில் 38 அணியினர் பங்கேற்று விளையாடினர்
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே நடத்தப்பட்ட கைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு எம்எல்ஏ டி.ஜே. கோவிந்தராஜன் பரிசுகளை வழங்கினார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு மு.க. ஸ்டாலின் அவர்களின் 70.வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியபாளையம் அருகே அத்தங்கி காவனூர் ஊராட்சியில் மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.சத்திய வேலு தலைமை வகித்தார். மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் தேவேந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் டி.கே. முனிவேல், மாவட்ட பிரதிநிதிகள், கன்னிகைப்பேர் கே.வி.வெங்கடாசலம், கண்ணபிரான், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் கவிராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இரண்டு நாள்கள் நடத்தப்பட்ட இந்த போட்டியில் 38 அணியினர் பங்கேற்று விளையாடினர். இதையடுத்து நடைபெற்ற பரிசளிக்கும் நிகழ்ச்சியில். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே. கோவிந்தராஜன் பங்கேற்று. முதலிடம் வென்ற அணிக்கு ரூபாய் 25,000 ஆயிரம் ரொக்க பரிசு, கோப்பையும் வழங்கினார். இரண்டாமிடம் வென்ற அணிக்கு ரூபாய் 20000. ரொக்கப்பரிசு கோப்பையும், முன்று மற்றும் நான்காமிடம் பிடித்த அணிகளுக்கு கோப்பைகளையும் வழங்கி பாராட்டினார். இதில் சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தி, மதன் சத்யராஜ், தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.