கும்மிடிப்பூண்டி: ரூ.10 லட்சம் மதிப்புள்ள சிலிண்டர், படுக்கைகள் பாரத் ஆக்சிஜன் நிறுவனம் வழங்கியது

கும்மிடிப்பூண்டி பாரத் ஆக்சிஜன் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சிலிண்டர், படுக்கைகள் உள்ளிட்டவைகளை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரிடம் வழங்கினர்.;

Update: 2021-05-31 05:14 GMT

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற அலுவலகத்தில் பாரத் ஆக்சிஜன் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சிலிண்டர், படுக்கைகள் உள்ளிட்டவைகளை அமைச்சர் நாசரிடம் வழங்கினர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுவலூர் ஃபேக்டரி இயங்கி வரும் பாரத் ஆக்சிஜன் என்ற நிறுவனம் அதன் உரிமையாளர் கிளமென்ட் ரூ. 10லட்சம் மதிப்பிலான சிலிண்டர் மற்றும் படுக்கைகளை கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற அலுவலகத்தில் அமைச்சர் நாசர் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜே. கோவிந்தராஜன், மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோரிடம் வழங்கினார். அவருடன் அரசு அதிகாரிகளும் திமுக கழக நிர்வாகிகளுடன் உடனிருந்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



Tags:    

Similar News