பேங்க் ஆப் பரோடாவங்கியின் சார்பில் மகளிருக்கு கடன் உதவி
கும்மிடிப்பூண்டியில் பேங்க் ஆப் பரோடா வங்கியின் சார்பில் மகளிருக்கு 8,43,26,000 ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பேங்க் ஆப் பரோடா சார்பில்1200 மகளிருக்கு 8 கோடியே 43லட்சத்து 26.ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
பாங்க் ஆப் பரோடா வங்கியின் கும்மிடிப்பூண்டி, ஆவடி, கோவில்பதாகை, திருவள்ளூர், மாதவரம், என்.எம்.ரோடு ஆவடி, பெரியப்பாளையம் உள்ளிட்ட 7 கிளைகளில் உள்ள 93 மகளிர் குழுக்களை சேர்ந்த 1200 மகளிருக்கு 8 கோடியே 43 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கும் விழா கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பாங்க் ஆப் பரோட வங்கி கிளை மேலாளர் ஸ்ரீகாந்த், சென்னை சமூக சேவை மையத்தை சேர்ந்த ஏசுராஜ், ஸ்ரீ கலைமகள் வித்யாலயா பள்ளி நிறுவன தலைவர் டாக்டர் திருஞானம், காரிடஸ் இந்தியா அமைப்பின் மாநில அலுவலர் டாக்டர் ஜான் ஆரோக்கியராஜ், சென்னை சமூக சேவை சங்க ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி அருள்செல்வி மற்றும் சிறப்பு அழைப்பாளராக பாங்க் ஆப் பரோடா பொது மேலாளர் சரவண குமார், மண்டல மேலாளர் லீனா, சென்னை சமூக சேவை சங்கத்தின் இயக்குனர் பாதிரியார் எம்.வி.ஜேக்கப் ஆகியோர் பங்கேற்று கடனுதவி காசோலைகளை வழங்கினார்கள். இதில் ஏராளமான மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.