மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் இடுப்பொருட்கள்: கும்மிடிப்பூண்டிஎம்எல்ஏ வழங்கல்
சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் பங்கேற்று பயனாளிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்களை வழங்கினார்
பெரியபாளையம் அருகே இலட்சிவாக்கம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட மூலம் தென்னங்கன்றுகள் மற்றும் மானிய விலையில் வேளாண்மை இரு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் பங்கேற்று பயனாளிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே இலட்சிவாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் விலை இல்லா தென்னங்கன்றுகள் மற்றும் மளிகை விலையில் வேளாண் இடுப்பொருட்கள் வழங்கும் விழா ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு வேளாண்மை உதவி இயக்குனர் இளங்கோவன் தலைமை வகித்தார். எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் பி.ஜே.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஏவி.இராமமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி. லோகேஷ், மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பாய்ப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலை இல்லா தென்னங்கன்றுகள் மற்றும் மானிய விலையில் தேவையான இடுபொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
பின்னர் அங்கு வந்திருந்த 300 வீடுகளுக்கு கொய்யா, நெல்லிக்காய், மாஞ்செடி, பலா, அடங்கிய மரக்கன்றுகளை உள்ளிட்டவை சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் சொந்த நீதி ரூபாய் 15,000 வேளாண் துறை அதிகாரிகளிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் குணசேகரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜெயலலிதா சசிதரன், ஊராட்சி மன்ற தலைவர் சிவசங்கர், துணைத் தலைவர் வடிவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, இளைஞர் அணி சேர்ந்த சங்கர், கார்த்திகேயன், சம்பத், தனசேகர் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஊராட்சி மன்ற தலைவர் வன ரோஜா நாதமுனி நன்றி கூறினார்.