கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையில் கிரேன் விழுந்து தொழிலாளி பலி

சென்னைகும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையில் கிரேன் விழுந்து வட மாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-07-19 02:15 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே புதுகும்மிடிப்பூண்டி தண்டலச்சேரி செல்லும் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான, மின்உற்பத்தி மற்றும் இரும்பு உருக்காலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 150க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வடமாநிலங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் குஜராத். ஒரிசா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த தொழிற்சாலையில் . உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிகொரிலால் (36) என்ற வாலிபர் கிரேன் ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று பணிக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலிருந்து கிரேன் தலையில் விழுந்தது. இதில் பிகொரிலாலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார்.

இதனைக் கண்ட. சகத் தொழிலாளர்கள் அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல்  பரிதாபமாக பிகொரிலால் உயிரிழந்தார் . இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம்   உடன் வேலை செய்யும் சக தொழிலாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News