எளாவூர்: லாரிகளில் உரிய ஆவணமின்றி கடத்தி வரப்பட்ட 122 டன் நெல் பறிமுதல், 7 பேர் கைது
ஆந்திராவிலிருந்து உரிய ஆவணங்களின்றியும் உரிய அனுமதியின்றியும் 7 லாரிகளில் எடுத்துவரப்பட்ட 122 டன் நெல் மூட்டைகள் எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் குடிமைப்பொருள் வழங்கல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்து 7 பேரை கைது செய்துள்ளனர்.
ஆந்திராவிலிருந்து உரிய ஆவணங்களின்றி தமிழகத்திற்கு நெல் மூட்டைகள் கடத்தப்பட்டு வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் தடுப்பு பிரிவு காவல்துறை டி.ஜி.பி அப்பாஸ் குமாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து.
திருவள்ளூர் ஆய்வாளர் முருகன் தலைமையிலான காவல்துறையினர் தமிழக ஆந்திரா எல்லையோர ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 6 லாரிகளில் சோதனையிட்டபோது அவை உரிய ஆவணங்களின்றியும் உரிய அனுமதியின்றியும் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து 6 லாரிகளில் இருந்த 91 டன் நெல் மூட்டைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் லாரியையும் 6ஓட்டுநர்களையும் கைது செய்துள்ளனர்.
அதேபோல் ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடி ஆந்திராவில் இருந்து வந்த லாரியிலிருந்து 31 டன் நெல் மூட்டைகளை பறிமுதல் செய்து ஒரு ஓட்டுனரை கைது செய்தனர். ஒரே நேரத்தில் 2 சோதனைச் சாவடிகளில் 122 டன் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்து 7 பேரை கைது செய்துள்ளனர்.