இலங்கை அகதிகள் முகாமில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே இலங்கை அகதிகள் முகாமில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-05-19 14:42 GMT

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சி பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சிப்காட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார், 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில் 1 இளைஞரை கைது செய்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News