27- வது அகில உலக யோகா போட்டி கும்மிடிப்பூண்டி பள்ளி மாணவன் இரண்டாமிடம்

27- வது அகில உலக யோகா போட்டி கும்மிடிப்பூண்டி பள்ளி மாணவன் இரண்டாமிடம் பிடித்தார்.;

Update: 2022-01-09 03:45 GMT
27- வது அகில உலக யோகா போட்டி கும்மிடிப்பூண்டி பள்ளி மாணவன் இரண்டாமிடம்

அகில உலக யோக போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த கும்மிடிப்பூண்டி மாணவன்.

  • whatsapp icon

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர் சூரஜ் சுந்தர் புதுச்சேரியில் நடைபெற்ற 27வது அகில உலக யோகாசன போட்டியில் 16 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை புரிந்தார்.

வெற்றி பெற்ற மாணவனுக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டி உள்ளனர். இதேபோன்று ஏளாவூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் மதன், உதயராஜ், நித்திய ஸ்ரீ மற்றும் மேக்கப் பிரியா ஆகியோர் 4 மற்றும் 5 இடத்தை பிடித்துள்ளனர்.

வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய மாணவர்களையும், மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்த வினாஸ்ரீ யோகா பயிற்சி பள்ளி ஆசிரியர்களான காளத்திஸ்வரன், அர்ச்சனா, வித்யா ஆகியோரை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ரயில் நிலையத்தில் இனிப்புகள் வழங்கி மேளதாளங்கள் முழங்க வரவேற்றனர்.

Tags:    

Similar News