தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தமிழ்மாநில காங்கிஸ் கட்சி சார்பில் கும்மிடிப்பூண்டியில் நல திட்ட உதவிக்ள் வழங்கும் விழா நடைபெற்றது.;

Update: 2022-01-03 01:45 GMT

கும்மிடிப்பூண்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் பிறந்த நாளை முன்னிட்டு கும்மிடிப்பூண்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் எஸ். சேகர் தலைமை தாங்கினார்.

நிகழ்விற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட ,வட்டார நிர்வாகிகளான பி. திருவெங்கடம் பி .எஸ்.பழனி, ஆத்தூர் தாஸ், எல்.கே.வெங்கட், டி. கே.மாரிமுத்து, ஆர்.அசோகன், என்.ஆர்.கே.தாஸ், கே.பி.காமராஜ், ரகமத்துல்லா, புருஷோத்தமன், நத்தம் சேகர், சரஸ்வதி ,ஜெகதீஷ்,குமார், நாகராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாளையொட்டி மாவட்ட தலைவர் எஸ். சேகர் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கினார். மேலும் தூய்மை பணியாளர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் போர்வை, புத்தாடை உள்ளிட்டவைகளை வழங்கியதோடு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே .வாசன் பிறந்த நாளை ஒட்டி கும்மிடிப்பூண்டி அருகே பனங்காடு ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

அவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்குமார் அவர்களின் ஏற்பாட்டில் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடும் ஏழை எளியவர்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News