சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
ஆவடி அருகே சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தவர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் வசிக்கும் நபர், கடந்த 23ஆம் தேதி மதியம் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது, தனது மகள் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில், மகளை காணவில்லை என்று புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் திருமுல்லைவாயில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் வேப்பம்பட்டை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் தமிழரசன், சிறுமியிடம் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
திருமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் இருந்த தமிழரசனை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையை மேற்கொண்டனர். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.