ஆவடியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண், ரயில் மோதி படுகாயம்

ஆவடியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது விரைவு ரயில் மோதியதில் கால் துண்டாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி;

Update: 2023-02-15 05:30 GMT

கோப்புப்படம் 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் என் எஸ் கே தெருவில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமார் இவருக்கு திருமணம் ஆகி மனைவி பொன் செல்வி(35) இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. 

முத்துக்குமார் திருவள்ளூர் அருகே சொந்தமாக வீட்டுமனை வாங்கி வீடு கட்டி வருகிறார். இந்த நிலையில் பொன் செல்வி சம்பவத்தன்று திருவள்ளூர் சென்று அங்க நடக்கும் வீட்டு பணிகளை கவனித்து பின்னர், அவர்கள் இருக்கின்ற திருமுல்லைவாயில் வீட்டிற்கு கிளம்பி  ஆவடி பேருந்து நிலையத்தில் இறங்கி, திருமுல்லைவாயல் செல்வதற்காக ஆவடி ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது 4வது ரயில் பாதையை கடக்க முயன்றபோது, திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் இவர் மீது மோதியது. இதில், பொன்செல்வியின் வலது கால் துண்டானது. இவரது அலறல் சத்தம் கேட்டவுடன், ரயிலுக்காக காத்திருந்த சக பயணிகள் ஆவடி ரயில்வே காவல்துறையினருக்கு  தகவல் கொடுத்தனர்.

தகவலின் பெயரில் அங்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் பொன்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக ஆவடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பொன் செல்விக்கு முதலுதவி செய்து மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து ஆவடி ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News