மதுரவாயலில் போதை மாத்திரை விற்பனை: கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

மதுரவாயலில் போதை மாத்திரை, கஞ்சா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-26 02:15 GMT

ஆவடி அடுத்த மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரை கஞ்சா உள்ளிட்டவை பொருட்களை பள்ளி மற்றும் கல்லூரி பயின்று வரும் மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக மதுரவாயல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .

இந்த தகவலின் பேரில் மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியில் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர். அப்போது, மதுரவாயல் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்த 2 கல்லூரி மாணவர்களை மடக்கிப்பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்ததில், மதுரவாயலை சேர்ந்த கிஷோர்குமார்(22), குகன்(21) என்பதும், இருவரும் சென்னையில் தனியார் கல்லூரியில் படிப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் மீது வழக்கு பதிந்து போலீசார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து சில சமூக ஆர்வலர்கள் கூறுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு  அடிமை ஆவதால் அவர்கள் எதிர்காலத்தை வீணாக்கி கொண்டிருக்கின்றார்கள் இதுபோன்று போதைப்பொருள் விற்பனை அதிகமாக நடைபெற்று வருவதாகவும் இதனை முற்றிலும் தடுத்த நிறுத்த வேண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டங்களை கடுமையாக்கி நாள் மற்றவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என பல்வேறு தரப்பட்ட மக்களும் சமூக ஆர்வலர்களும் மலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News