திருவள்ளூர்:1000 ஆக்ஸிஜன் படுக்கை அமைக்கும் பணி- அமைச்சர் நாசர் தகவல்!
திருவள்ளூர் மாவட்டத்தில் 1000 ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் சா.மு. நாசர் கூறினார்.;
அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள அம்மா திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் படுக்கைகள், கழிவறைகள், மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சா.மு. நாசர், திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தும் விதமாக சுமார் 1000 ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் ஆவடியில் உள்ள அம்மா திருமண மண்டபத்தில் 112 ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு ஒரு வாரத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.