திருவேற்காடு: கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்
திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் சா.மு. நாசர் தொடங்கி வைத்தார்.;
ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.
அதுபோல அயனம்பாக்கம், எஸ்.எம்.பி புளியம்பேடு, ராஜீவ் நகர், உதவும் கரங்கள் மற்றும் பல்லவன் நகர் ஆகிய பகுதிகளில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களையும் அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் திருவேற்காடு நகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.