திருமுல்லைவாயில்: நரிக்குறவரின் வீடியோ பதிவு... உதவிய கோட்டாட்சியர்!

திருமுல்லைவாயிலில் உணவுற்கு வழியில்லாமல் வீடியோ பதிவிட்ட நரிக்குறவர் குடும்பத்தினருக்கு வருவாய் கோட்டாட்சியர் உதவி புரிந்தார்.

Update: 2021-05-25 13:44 GMT

நரிக்குரவருக்கு உதவிய கோட்டாட்சியர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் பகுதியில் நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் பகுதி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரானா இரண்டாம் அலை பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு தொழில்கள் முடங்கி போயுள்ளன.

ஊசிமணி, பாசிமணி போன்ற பொருட்களை விற்று அன்றாட பிழைப்பை நடத்தி வந்த இவர்கள், தற்போது வாழ்வாதாரம் பாதித்து, உணவிற்கு கூட வழியில்லை என வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.

அந்த வீடியோ காட்சியை கண்ட திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ப்ரீத்தி பார்கவி, உடனடியாக, திருமுல்லைவாயல் நரிக்குறவர் காலனி பகுதிக்கு நேரடியாக வந்து அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய ஒரு மாதத்திற்கு தேவையான பொருள்களை 102 குடும்பத்தினருக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக வழங்கியுள்ளனர்.

இதனை பெற்றுக்கொண்ட நரிக்குறவர் மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News