திருமுல்லைவாயில் தகன மேடை: அமைச்சர் சா.மு. நாசர் நேரில் ஆய்வு!
திருமுல்லைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரிமேடையை அமைச்சர் சா.மு. நாசர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.;
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரிமேடையை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆவடி தொகுதிக்குட்பட்ட திருமுல்லைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரிமேடையை இன்று தமிழக பால்வளத்துறை அமைச்சரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான சா.மு. நாசர் மற்றும் ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.