ஆவடி அருகே வீட்டின் பூட்டை திறந்து தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை
ஆவடி அருகே வீட்டின் பூட்டை திறந்து 16 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.;
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே கொள்ளுமேடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஏழுமலை(30) இவர் இவர் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர்.
இவரது தந்தை சேட்டு(50) ஆவடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இரவு காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி கை குழந்தை தன் தாயுடன் ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி கும்பிட கடந்த 11ஆம் தேதி அன்று வீட்டை பூட்டிக் கொண்டு சென்றுள்ளார். வேலை காரணமாக ஏழுமலையின் தந்தை சேட்டு கோவிலுக்கு செல்லவில்லை. ஏழுமலை தாயாரிடம் ஒரு சாவி இருந்தது. கோவிலுக்கு செல்லும் அவசரத்தில் சாவியை தொலைத்து விட்டு சென்றுள்ளார்.
வீட்டிற்கு கூடுதல் சாவிகளை தயாரித்து தன் தாய் மற்றும் தந்தையிடம் ஒரு சாவி கொடுத்திருந்தார். இந்த சாவியை ஏழுமலையின் தாய் வேலைக்கு செல்லும் அவசரத்தில் வீட்டை பூட்டிக்கொண்டு சாவி தொலைத்துவிட்டு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அன்று இரவு சாவியின் மூலம் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பீரோவில் இருந்த தங்க நகை வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வீடு திரும்பிய ஏழுமலை வந்து பார்த்தபோது வீட்டின் கதவை திறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து தன் வீட்டில் அவரது தந்தை இருக்கிறாரா என்று பார்த்தனர். ஆனால் அங்க அவரது தந்தை இல்லாததை தெரிந்து உடனடியாக தந்தை சேட்டுக்கு, போன் செய்துள்ளார். அவர் வேலையில் இருப்பதாக கூறி இருந்தார்.
சந்தேகம் அடைந்த ஏழுமலை உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 16 சவரன் தங்க நகை, மற்றும் வெள்ளி பொருட்கள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்த ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு இது குறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.