ஆவடி வீராபுரம் புதிய கன்னியம்மன் நகர் பகுதியில் மன உளைச்சல் காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.
ஆவடி வீராபுரம் புதிய கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் கன்ன பிரசாத் (29) இவர், ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ்காரர். 5ஆண்டுகளுக்கு முன் அனுசுயா (24) என்பவருடன் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கண்ண பிரசாத் குடும்பத்தினர் அனுசுயாவிடம் சரிவர பேசாததால் விரக்தியுடன் இருந்துள்ளார். அதில் மனமுடைந்து நேற்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனர்.