ஆவடியில் தமுமுக சார்பில் கொரோனா சிறப்பு உதவிக்காக வார் ரூம் அமைப்பு!

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமுமுக சார்பாக கொரோனா சிறப்பு உதவிக்காக ஆவடியில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-05-20 12:41 GMT

ஆவடியில் கொரோனா சிறப்பு உதவிக்காக தமுமுக அமைத்துள்ள வார் ரூம்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இறப்பும் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தமுமுக சார்பாக தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமக்களின் உதவிக்காக ஆவடியில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான எந்த ஒரு உதவிகளுக்கும் பொதுமக்கள் ஆவடி நகர தமுமுக நிர்வாகிகள் எண்: 8870756787, 9092219139 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என தமுமுக அறிவித்துள்ளது.

Tags:    

Similar News