ஆவடி அருகே ஈச்சம் மரக்கன்று மற்றும் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி
ஆவடி அருகே வெள்ளானுர் கிராமத்தில் ஈச்சம் மரக்கன்றுகள் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆவடி வெள்ளானூர் ஊராட்சி கொள்ளுமேடு கிராமத்தில் ஈச்சம் மரக்கன்று, பனை விதை விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வெள்ளானூர் ஊராட்சி, கொள்ளுமேடு கிராம பகுதியில் அரிதம் தன்னார்வலர் குழுமம் சார்பில், கிராமப் பகுதியில் அமைந்துள்ள தாமரை குளத்தின் கரையை சுற்றி 200 ஈச்சம் மரக்கன்றுகள் மற்றும் அதே பகுதியில் அமைந்துள்ள ஏரிக்கரையில் 1000 பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு நடைப்பெற்றது.
தனியார் தொண்டு நிறுவனமான அரிதம் தன்னார்வலர் குழுமம் இயற்கை பாதுகாப்பு குறித்தும் பொதுமக்களுக்கு பனையின் பன்முக பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் சென்னை சுற்றுப்புற கிராம பகுதிகளில் இலவசமாக மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் விதைக்கும் பணியை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம்,ஆவடி வெள்ளானூர் ஊராட்சி கொள்ளுமேடு கிராமத்தில் இன்று ஈச்சம் கன்று,பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மணிவர்ணன் தளவாய் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5.ம்அணி மற்றும் மயில்வாகனம் AITUC திருவள்ளூர் மாவட்ட செயலாளர் வருகைப்புரிந்து மரக்கன்று விதைகளை விதைத்தனர்.மேலும் மரங்களின் முக்கியத்துவம் பற்றிய புரிதலை பொதுமக்களிடையே விழிப்புணர்வாக எடுத்து உரைத்தனர். இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் வெங்கடேசன், தியாகராஜன்,பிரபு, உள்ளிட்டோர் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.