திருவேற்காடு அரசு மருத்துவமனைக்கு ரூ.15 லட்சத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்

திருவேற்காடு அரசு மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் சார்பில் 15 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் அமைச்சர் சா.மு.நாசரிடம் வழங்கப்பட்டது.

Update: 2021-06-09 09:31 GMT

திருவேற்காடு அரசு மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் வாங்கிய ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர் நாசர் பெற்றுக்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொரோனா மருத்துவத் தேவைக்கு 15 லட்சம் மதிப்பிலான 10 ஆக்சிசன் செறிவூட்டி இயந்திரங்கள் வழங்க  NETZCH எனும் தனியார் நிறுவனம் மூலம் இன்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் ச.மு நாசரிடம் வழங்கப்பட்டது . இதனை பெற்றுக் கொண்ட அமைச்சர் திருவேற்காடு நகராட்சி ஆணையர் வசந்தியிடம் பயன்பாட்டிற்காக ஒப்படைத்தார்.

அப்போது திருவேற்காடு நகராட்சியில் நாள்தோறும் கொரோனா எண்ணிக்கை குறைந்து ஒற்றை இலக்கை எட்டியுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து, தொடர்ந்து தொற்று இல்லாத நகராட்சியாக மாற்ற தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதில் சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ், திருவேற்காடு நகர செயலாளர் என். இ. கே. மூர்த்தி, சுகாதார அலுவலர் லாவண்யா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News