ஒரு கிலோ கஞ்சாவுடன் பிரபல ரவுடி கைது
ஆவடி அருகே கரலப்பாக்கத்தில் கஞ்சா விற்பனை செய்த பிரபல ரவுடியை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.;
ஆவடி அடுத்த கரலப்பாக்கம் பெரிய தெருவில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையில் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கே சந்தேகத்திற்கிடமாக ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் ஒருவர் 1 கிலோ 100 கிராம் எடை உள்ள கஞ்சா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், அதனை பதுக்கி வைத்த வீட்டின் உரிமையாளரும் பிரபல ரவுடியுமான சூரிய பிரகாஷ் என்பவரை போலீசார் பிடித்தனர். பின்னர் சூரிய பிரகாஷை காவல் நிலையம் கொண்டுவந்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை பொட்டலங்களாக மாற்றி இல்லங்களாக மாற்றி விற்பனை செய்ததை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து போலீசார் சூரிய பிரகாஷை கைது செய்தனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் மர்ம நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.