விபத்துக்களைத் தடுக்கும் வகையில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும்
Road Occupy Removal ஆவடியில் விபத்துக்கள் தடுக்கும் விதமாக சாலை அருகே ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி நடவடிக்கை.;
ரோட்டோரமிருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் கொண்டு அகற்றப்பட்டன.
Road Occupy Removal
ஆவடி அருகே சாலைகளில் அதிக விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் நடப்பாதை கடைகளை அகற்றிய நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட சுற்று பகுதிகளின் கடந்த ஒரு மாதத்தில் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் நடத்தி வந்த நபர்களால் 50க்கும் மேற்பட்ட நபர்கள் பள்ளிக்கு செல்லும்சிறுவர்கள் முதல் பணிக்குச் சென்று வீடு திரும்பும் நபர்கள், வரைசிறுக்காயம் மற்றும் பலத்த காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு சிலர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் ஆவடி போக்குவரத்து ஆய்வாளர் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஆவடி செக் போஸ்ட் முதல் பட்டாபிராம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையை ஆக்கிரமிப்பு செய்து பந்தல் அமைத்து சிலர் கொட்டகை அமைத்து வியாபாரம் செய்து வந்த 200-க்கும் மேற்பட்ட கடைகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினர்.
Road Occupy Removal
ஒரு சில வியாபாரிகள் நான்கு சக்கர கார் மற்றும் வேன்களில் கொட்டகை அமைத்து வியாபாரம் செய்தவர்களையும் அப்புறப்படுத்தினார், இதனால் அப்பகுதியா செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருப்பதால் மகிழ்ச்சியுடன் வாகனம் ஓட்டி செல்கின்றனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் தெரிவிக்கையில் சாலை இருப்பு புறம் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் நடத்துவ காரணத்தினால் சாலை மிகவும் குறுகிய அளவில் காணப்படுவதாக இதனால் இரு திசைகளில் செல்லும் வாகனங்கள் சில நேரங்களில் போக்குவரத்து காரணமாக விபத்துக்கள் ஏற்படுகின்றது. ஆக்கிரமிப்புகளை அகற்றிய காரணத்தினால் இனிமேல் போக்குவரத்து இடையூறு இல்லாமல் வாகனங்கள் சீராக சென்று வர மிக வசதியாக உள்ளதாகவும், நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.