புதிதாக மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு; கலெக்டரிடம் மனு

திருமுல்லைவாயல் பகுதியில் புதிதாக, அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை திறக்கக் கூடாது என, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.;

Update: 2023-02-21 03:15 GMT

மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் மனு (கோப்பு படம்)

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.  இப்பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இஸ்லாமிய மக்கள் தொழும் பள்ளிவாசல் ஒன்று கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகவே செயல்பட்டு வருகிறது.

இப்பகுதியில் அனைத்து மதத்தை சார்ந்த மக்கள் வசித்து வரும் நிலையில், புதிதாக அரசு டாஸ்மாக் கடை ஒன்று திறக்க அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த மதுபானக் கடை இப்பகுதியில் அமைக்கக் கூடாது என்றும், இதனால் பள்ளிவாசலுக்கு வரும் இஸ்லாமிய மக்களுக்கும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவி மாணவர்களுக்கும் அப்பகுதி பெண்களுக்கு இடையூறாக இருக்கும்.

எனவே,பிரதான சாலையில் அமைய உள்ள இந்த டாஸ்மாக் கடையை கடந்துதான் சென்று வர வேண்டும். இந்த கடை திறக்கப்பட்டால் ‘குடி’மகன்களின் தொல்லை அதிகரித்து பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

எனவே, தங்கள் பகுதியில் அமைய உள்ள டாஸ்மாக் அரசு மதுபான கடையை தடுத்து நிறுத்த வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மக்கள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் சிடம் மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், இதுகுறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தார்.

Similar News